இன்றைய பிரபலம் - டி. எம். சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்.)

Posted: 2013-10-24 14:48:53

இன்று நாம் காண இருக்கும் சினிமா பிரபலம் ஒரு பாடகர்.  ஒரு புகழ்பெற்ற பாடகராக தென்னிந்தியாவில் திகழும் டி.எம்.எஸ். பிறந்த நாள் மார்ச் 24, 1922. இவர் இவருடைய தற்போதைய வயது 88. இவர் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் டி. எம். சௌந்தரராஜன். இவரை மக்கள் அன்போடு டி.எம்.எஸ். என்றும் அழைப்பார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமராவ், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய் சங்கர், ராஜ்குமார் மற்றும் நாகேஸ்வர ராவ் என அனைத்து நடிகர்களுக்கும் பாடலுக்கு குரல் கொடுத்த சிறந்த குரலுக்கு சொந்தக்காரர். தன் இனிமையான குரலால் தென்னிந்தியாவையே கட்டிப்போட்டவர்.

டி.எம்.எஸ். என்ற அவர் பெயரில் உள்ள 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகு ளுவா', 'எம்' ஆனது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; மற்றும் 'எஸ்' என்பது சௌந்தரராஜன் என்பதையும் குறிக்கும். டி.எம்.எஸ்ஸின் அப்பா மீனாட்சி அய்யங்கார் மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் வேலைசெய்தவராம். இவர் பாடிய முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி'. இப்பாடல் ஒலிப்பதிவானது கோவையில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில். சுமார் 60 வருடங்களுக்கு பிறகு ஒரு டிவி
தொடருக்காக மறுபடியும் மீண்டும் அங்கே சென்று இடிபாடாகக்கிடந்த சென்ட்ரல் ஸ்டுடியோவில் பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடினார்.

டி.எம்.எஸ் தன் இனிய குரலில் பாடிய முருகன் பாடல்களான 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் ஹிட் பாடல்கள்தான். இந்த இனிய சிறந்த பாடல்களை இசையமைததும் இவர்தானாம். 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' என்ற பாடலை யாராலும் மறக்க இயலுமா?

அடிமைப் பெண்' படத்தில் டி.எம்.எஸ். பாட மறுத்த பாடலை அப்போது திரையுலகில் இளம் பாடகராக வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி புகழ்பெற்றார். அப்பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல். கவிஞர் வாலியைத் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை பாடகர் டி.எம்.எஸ்சையே சேரும். காதல் தோல்வி பாடல்களை சிறப்பாக பாடும் இவருக்கு ஒவ்வொரு பாடல் பாடும்போதும் தனலட்சுமி என்ற தான் காதலித்து மணக்காமல் போன பெண்ணின் நினைவு வந்துசெல்லுமாம். கர்நாடக சங்கீத பாடல் மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையுடன் கூடிய பாடல்களையும் சிறப்பாக இவர் பாடுவார் என்பதற்கு உதாரணம் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு' பாடல். புட்டபர்த்தி சாய்பாபா மற்றும் காஞ்சிபெரியவர் ஆகிய இருவர் மீதும் மிகுந்த பற்றும மரியாதையும் கொண்டவர் டி.எம்.எஸ். சாய்பாபா கூட இவரது வீட்டுக்கு ஒரு முறை வருகை தந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைத்து அரசியல் சார்ந்த நடிகர்களிடமும் நெருங்கிப் பழகியிருக்கிறார். இருந்தபோதும் தன் காரியங்களுக்காக ஒருமுறை கூட அவர்களை அணுகியதில்லையாம் டி.எம்.எஸ். பாடகர்களுக்கும் விருது வழங்கவேண்டும் என்ற அவரது பிடிவாதம் தான் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கும் பழக்கத்தை திரையுலகை ஏற்படுதியதாம். 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் பாடகர்களை தவிர அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட கடவுள் வாழ்த்து பாட இவர் மறுத்துவிட்டாராம். இந்த நிகழ்ச்சிக்கும் பிறகு திரைப்பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்க ஆரம்பித்தார்கள்.

டி.எம்.எஸ். நாயகனாக 'பட்டினத்தார்' மற்றும் 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் டி.எம்.எஸ். யாருடனும் ஒட்டிப்பழக மாட்டாராம். தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியுள்ளாராம். இது தவிர, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.எஸ். நீண்டகாலம் நோய் நொடி ஏதுமின்றி வாழ்ந்து தன் கலை சேவையை தொடர நாம் இறைவனை பிரார்த்திப்போம்.


Movies:
Cast: T.M.Soundararajan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
kaathalichsaa pOthaathu atha moodi vaikka...

kaathalichsaa pOthaathu atha moodi vaikka...

64x64
ram pam pam aarampam...

ram pam pam aarampam...

64x64
Vennilave Vennilave Nalla Naal Paarthu Vaa

Vennilave Vennilave Nalla Naal Paarthu Vaa

64x64
E raasaaththi rOsaappoo vaa vaa....

E raasaaththi rOsaappoo vaa vaa....

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Collection of Thathuva padalgal

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Tamil short film

Tamil short film - Jaathi - The Caste.HD with English Subtitle latest 2011. avi ...

Today's Movies

Ayyanar Veethi
Ayyanar Veethi

Ayyanar Veethi

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Mukti Mohan

B'Day: 1987-06-21
Role: Actress, model,dancer

64x64

Washna Ahamad

B'Day: 1989-08-13
Role: Actress

64x64

Remya Nambisan

B'Day: 1986-07-26
Role: Actress, television presenter, singer

64x64

Sruthika

B'Day: 1986-00-00
Role: Film actress

more profiles