இன்றைய இயக்குனர் – கெளதம் மேனன்

Posted: 2013-10-24 12:51:53

இன்று நாம் காண இருக்கும் சினிமா பிரபலம் ஒரு இயக்குனர். இவர் பெயர் கெளதம் மேனன். தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி படங்களில் இயக்குனர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராக திகழ்கிறார் கெளதம் மேனன். இவர் பிறந்த நாள் பிப்ரவரி 25, 1973. இவருடைய தற்போதைய வயது 39. இவர் கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் பிறந்தவர். கெளதம் மேனன் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மின்னலே’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த காதல் இசைப்படமாக அமைந்தது. இப்படம் இவருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இப்படம் ஹிந்தியில் ‘ரேஹ்னா ஹே தேரே தில் மே’ என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

2003-ஆம் ஆண்டு ‘காக்க காக்க’ என்ற படம் இவர் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படம் நடிகர் சூர்யாவை உச்சத்துக்கு கொண்டுசென்றது என்றால் மிகையில்லை. ஒரு காவல்துறை அதிகாரியின் பழிவாங்கும் கதையை மிக வித்தியாசமாக சொன்ன படம் இது. படம் பெரிய வெற்றி பெற்றது. அதோடு தெலுங்கில் ‘கர்சனா’ என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.  தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு 2006-ஆம் ஆண்டு கெளதம் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. இப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்தார். இப்படமும் ஒரு வெற்றி படமே. இப்படத்தில் கமல் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு அடுத்ததாக கெளதம் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இப்படத்தில் நாயகனாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். நடிகை ஜோதிகா ஒரு வித்தியாசமான வேடத்தில் வில்லியாக இதில் நடித்திருப்பார். ஆனாலும் கூட இப்படம் ரசிகர்களை கவராமல் தோல்வியடைந்தது.

அடுத்த வருடம் ரிலீஸ் ஆன ‘வாரணம் ஆயிரம்’ படம் கெளதம் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்தது. சூர்யா பத்து வயது சிறுவனாகவும் ஐம்பது வயது முதியவராகவும் தோன்றி ரசிகர்களை வியக்கவைத்தார். இப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தேசிய விருதை சிறந்த தமிழ் படத்திற்காக பெற்றது. பிறகு இரண்டு வருட இடைவெளியில் ரிலீஸ் ஆன படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இப்படம் நடிகர் சிம்புவுக்கு மறுவாழ்வை அளித்தது. இப்படம் தெலுங்கில் ‘யா மாயா செசவே’ மற்றும் ஹிந்தியில் ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் ரீமேக்கும் ஆனது. தெலுங்கில் இப்படத்தை எடுத்ததற்காக ஆந்திர அரசின் சினிமா விருதான நந்தி விருதும் கெளதம் மேனனுக்கு கிடைத்தது. கடந்த வருடம் இவரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. மனப்பிறழ்வு நோய்க்கு ஆளான ஒரு இளைஞனின் கதை இது. இப்படம் ஒரு தோல்வி படமே. தற்போது கெளதம் மேனனின் இயக்கத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற படம் நடிகர் ஜீவாவின் நடிப்பில் உருவாகிவருகிறது. இப்படத்தில் முதன்முதலாக கெளதம் மேனனுடன் இசைஞானி இளையராஜா இணைந்துள்ளார். அதோடு தெலுங்கில் ஒருபடமும் ஹிந்தியில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது.

கெளதம் மேனன் தயாரிப்பாளராக ‘நடுநிசி நாய்கள்’, ‘வெப்பம்’, ‘ஏக் தீவானா தா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ மற்றும் ‘தங்க மீன்கள்’ ஆகிய படங்களை எடுத்துள்ளார். இவர் இயக்கத்தை பொருத்தவரை காட்சிகளில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார். பொழுதுபோக்கில் வித்தியாசமான போக்கு என்பதே இவர் படங்களில் ரசிகர்கள் பார்ப்பது. வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான விஷயங்களை குறைத்துக்கொண்டு நல்லபடங்களின் இவர் கவனம் செலுத்தினால் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனர்களில் இவரும் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.


Movies:
Cast: Gautham Menon


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
aadungkaL paadungkaL piLLai...

aadungkaL paadungkaL piLLai...

64x64
Kalyana naal paarka sollalaama

Kalyana naal paarka sollalaama

64x64
Kolli Malai Chaaralile

Kolli Malai Chaaralile

64x64
thookkam un kaNkaLai thazuvaddumE...

thookkam un kaNkaLai thazuvaddumE...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Best Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Naalai Namdhey
Naalai Namdhey

Naalai Namdhey

see more

Music Concert

Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013
Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013

Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013

see more

Profiles

64x64

Singer Usha

B'Day: 1980-05-29
Role: Singer

64x64

Jothika

B'Day: 1978-10-18
Role: Film actress

64x64

Gayathri Jayaram

B'Day: 1984-09-27
Role: Actress, model

64x64

Shambavi Sharma

B'Day: 1989-04-25
Role: Actress, model

more profiles