இன்றைய பிரபலம் - சமந்தா

Posted: 2013-10-30 16:09:23

ஒரு இளம் நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு என தற்போது முன்னணி நடிகையாக உருவெடுத்துவரும் ஒருவரைப் பற்றி நாம் இன்று காண்போம். அவர் பெயர் சமந்தா. முழுப்பெயர் சமந்தா ரூத் பிரபு என்பதாகும். சமந்தா பிறந்த ஏப்ரல் 28, 1987. இவருடைய தற்போதைய 25 ஆகும். இவர் பிறந்த ஊர் சென்னை ஆகும். இளங்கலை பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு படித்தவர். சமந்த தற்போது ஒரு நடிகையாக மற்றும் மாடலாக தமிழ் மற்றும் தெலுங்கில் அறியப்படுகிறார். சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு பெற்றோருக்கு மகளாக பிறந்தவர். இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்.

சினிமா வாய்ப்பு: சமந்தா தனது இளம் வயதிலிருந்தே மாடலிங் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு இயக்குனர் ரவிவர்மன் இயக்கத்தில் வெளிவந்த 'மாஸ்கோவின் காவேரி' என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால் இந்தப் படம் அவ்வளவாக வெற்றியடையாமல் போனதால் சமந்தா பெயர் வெளியே அவ்வளவாக தெரியவில்லை. இதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளிவந்த 'யே மாயா செசவே' என்ற படம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்றது. பிறகு சமந்தா நடிப்பில் 'பிருந்தாவனம்', 'தூக்குடு' மற்றும் 'நான் ஈ' ஆகிய படங்கள் வரிசையாக வெற்றிபெற்றது. இதன்மூலம் சமந்தா தற்போது பெரிய இயக்குனர்கள் தேடும் நடிகையாக உள்ளார்.

குறிப்பிடதக்க் படங்கள்: சமந்தா நடித்த படங்களில் 'யே மாயா செசவே', இந்தப் படத்தின் வெற்றிதான் அவரை ரசிகர்களுக்கு முழுமையாக அறிமுகம் செய்துவைத்த படம். தமிழில் 'பாணா காத்தாடி' படத்தில் நடித்திருந்தார். இருந்த போதிலும் 'நான் ஈ' படம் இவருக்கு ஒரு சிறந்த முகவரியை தந்தது எனலாம். தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படமான 'நீதானே என் பொன்வசந்தம்' படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் இசைஞானி இசையமைப்பில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன. இந்தப் படத்தை இயக்குபவர் கவுதம் மேனன்.

விருதுகள்: 'யே மாயா செசவே' படத்தில் தெலுங்கில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகை விருது மற்றும் சினிமா விருதுகள் ஆகியவை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'கடல்' படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'ஐ' படத்திலும் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் இந்த இரண்டு படங்களிலும் நடிக்க இயலாமல் போனது. அழகும் திறமையும் உள்ள சமந்தா தன் வாழ்வில் வெற்றிமேல் வெற்றியடைய நாம் வாழ்த்துவோம்.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Vetri meethu vetri vanthu

Vetri meethu vetri vanthu

64x64
Oru Naalum Unai Maravaatha

Oru Naalum Unai Maravaatha

64x64
Athimara Poovithu

Athimara Poovithu

64x64
Mullil roja thulludhe

Mullil roja thulludhe

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thirumanam
Thirumanam

Thirumanam Ennum Nikka

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Keerthi Suresh

B'Day: 1992-00-00
Role: Actress

64x64

Tashu Kaushik

B'Day: 1985-10-20
Role: Actress, model

64x64

Parvathy Menon

B'Day: 1986-04-23
Role: Actress

64x64

Charmee

B'Day: 1987-05-17
Role: Actress

more profiles