போடா போடி - திரைப்பட விமர்சனம்

Posted: 2013-10-31 11:12:38

நடிகர்கள்: சிம்பு, வரலக்ஷ்மி, ஷோபனா, விடிவி கணேஷ் மற்றும் பலர்
இசை: தரன் குமார்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்ட்
இயக்குனர்: விக்னேஷ் சிவன்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்

ஒரு வித்தியாசமான சிம்பு படம் இது, பாடலாகட்டும், கதையாகட்டும், கதையை சொன்ன விதத்திலாகட்டும் அல்லது படத்தில் வரும் காதல் காட்சிகளாகட்டும் எல்லாவற்றிலுமே ஒரு புதுமையை இந்தப் படத்தில் காணமுடிகிறது. படமானது கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காதல் கதையை இயக்கியிருப்பவர் விக்னேஷ் சிவன். இனி படத்தின் கதையென்ன என்று பார்ப்போம்.

கதைப்படி அர்ஜூன் (சிம்பு) ஒரு அனிமேஷன் நிபுணர், லண்டனில் உள்ள தன் சித்தப்பா வீட்டில் தங்கி வேலைசெய்துவருகிறார். இந்நிலையில் அர்ஜூன் நிஷா (வரலக்ஷ்மி) என்ற பெண்ணை சந்திக்கிறான், பிறகு காதலில் விழுகிறான். நிஷாவுக்கு சல்சா என்ற நடனத்தில் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற லட்சியவெறி உடையவர். இதற்கிடையே அர்ஜூன் நிஷாவை திருமணம் செய்துகொள்கிறான். அவர்களிடையே சிறு சிறு சண்டைகள் தோன்றி பிரிந்துசெல்கிறார்கள். பிறகு அவர்கள் காதல் என்ன ஆனது, நிஷா சல்சா நடனத்தில் கலந்துகொண்டாளா என்பதே படத்தின் மீதிக்கதை.

சிம்புவின் நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு அருமையான படம் என்று உறுதியாக சொல்லலாம். ஒரு நடிகராக ஒரு நல்லதொரு பரிணாமத்தை புதியதாக சிம்புவிடம் காணமுடிகிறது இந்தப் படத்தில்.

அறிமுக நாயகி வரலக்ஷ்மி ஓரளவு நடிக்கவும் செய்கிறார். நடன காட்சிகளில் கலக்கியுள்ளார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தும் அளித்துள்ளார்.

ஷோபனா மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்துள்ளார்கள்.

படத்தில் சொல்லியாகவேண்டிய இன்னொரு விஷயம் அதன் இசையமைப்பாளர் தரன் குமார். அணைத்து பாடல்களுமே ஹிட் வகை. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.

ஒளிப்பதிவு டங்கன் டெல்போர்ட் சிறப்பாக படத்தை பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைக்கதை செய்துள்ள விதத்தை பார்க்கும்போது, திரையில் ஒரு நாவலை படிப்பது போன்று அத்தியாயங்களாக காட்சிகளை பிரித்து சொன்னவிதம் அருமை மற்றும் புதுமை. நிச்சயம் இயக்குனரை பாராட்டியே தீரவேண்டும் திரைக்கதைக்காக.

மொத்தத்தில் மென்மையான அருமையான காதல் கதை 'போடா போடி'.

Movies: Poda Podi
Cast: Shobana, Silambarasan, Varalakshmi Sarathkumar


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Neeya illai naanaa

Neeya illai naanaa

64x64
oru vaanavil pOlE en vaazvilE..

oru vaanavil pOlE en vaazvilE..

64x64
Sirikkindraal indru

Sirikkindraal indru

64x64
Chinna ponnuthan

Chinna ponnuthan

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Puja Gupta

B'Day: 1988-07-06
Role: Actress, model

64x64

Jaishree

B'Day: 1961-00-00
Role: Writer

64x64

Shruthi Sharma

B'Day: 1981-00-00
Role: Actor, Model

64x64

Jothisa

B'Day: 0000-04-14
Role: Actress

more profiles