துப்பாக்கி - திரைப்பட விமர்சனம்

Posted: 2013-10-31 11:18:33

நடிகர்கள்: விஜய், காஜல் அகர்வால், வித்யுத், சத்யன் மற்றும் பலர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: எஸ்.தாணு

இயக்குனர் ஏ.ஆர். இயக்கத்தில் முதன்முதலாக விஜய் நடித்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஒளிப்பதிவு வேறு சந்தோஷ் சிவன். இப்படி பல காரணங்களால் 'துப்பாக்கி' படம் தொடக்கத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இப்போது மிகுந்த வெற்றியை பெற்றிருக்கிறது. இனி படத்தின் கதையென்ன என்று பார்ப்போம்.

படத்தின் மொத்தக் கதையையும் ஒரேவரியில் சொல்லிவிடலாம். அதாவது மிலிட்டரி ஜெகதீஷ் (விஜய்) தீவிரவாத தலைவனின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு இயங்கும் கும்பலை தேடிக்கண்டுபிடித்து அழிக்கிறார் என்பதே 'துப்பாக்கி' படத்தின் ஒருவரிக்கதை எனலாம். ராணுவ அதிகாரி ஜெகதீஷ் தன்னோட விடுமுறைக்கு மும்பை வருகிறார். அவர் நாட்டின் ரகசிய பாதுகாப்பு குழுவிலும் இருப்பவர். ஒருமுறை தன் காவல்துறை அதிகாரியும் நண்பருமான சத்யனுடன் பஸ்ஸில் செல்கையில் ஜெகதீஷ் கையில் ஒரு தீவிரவாதி மாட்டுகிறான். அவனை வைத்து அவனோடு தொடர்புடைய 12 மற்ற தீவிரவாதிகள் குழுவையும் சுட்டுக் கொல்கிறார். பிறகு இதற்கெல்லாம் தலைவனாக செயல்படும் தீவிரவாதியை இறுதியாக தேடிச்சென்று ஜெகதீஷ் அழிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ராணுவ அதிகாரி ஜெகதீஷ் பாத்திரத்தில் மிக அழகாக பொருந்துகிறார் விஜய். பன்னிரண்டு தீவிரவாதிகளை தன்னோடு சேர்த்து 12 ராணுவ நண்பர்களுடன் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லும் காட்சி சூப்பர். விஜய்க்கு இந்தப் படம் ஒரு முக்கியமான படம்.

காஜல் அகர்வால் படத்தில் இருக்கிறார். அவ்வப்போது வந்து விஜய்யுடன் அருமையாக நடனம் ஆடுகிறார் போகிறார். காஜலுக்கு மொத்தத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

சத்யன் படத்தில் சிறிது நேரமே வருகிறார். ஏதோ கொஞ்சம் சிரிக்கவைக்கிறார். படத்தில் அதிகம் சிரிக்கவைப்பவர் காஜலை திருமணம் செய்ய வரும் மிலிட்டரி அதிகாரி ஜெயராம் தான். விஜய்-காஜல்-அகர்வால் மூன்று பெரும் வரும் காட்சிகள் எல்லாம் காமெடிதான்.

வில்லனாக வரும் வித்யுத் சும்மா ஆறடி உயரத்தில் சிக்ஸ் பேக் உடலோடு கம்பீரமாக ஸ்டைலாக வருகிறார். விஜய்யும் வித்யுத்தும் படத்தின் இறுதிக் காட்சியில் மட்டுமே சந்திக்கிறார்கள். மோதுகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் ஓரளவு நன்றாக உள்ளது. விஜய் பாடும் 'கூகிள்' கூகுள்' பாடல் சூப்பர் ஹிட் வகை. ஒளிப்பதிவு மிகவும் தரமாக ஆங்கிலப்படம் போல் செய்துள்ளார் சந்தோஷ் சிவன்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன் வித்தியாசமான அதிரடி திரைக்கதையில் தன் கதை சொல்லும் திறமையை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். வேகமான புத்திசாலித்தனமான திரைக்கதை. மீண்டும் ஒரு பெரிய வெற்றி.

மொத்தத்தில் 'துப்பாக்கி' தீபாவளி சரவெடி ஆக்சன் படம்.

Movies: Thuppakki
Cast: Kajal Aggarwal, Sathyan, Vijay


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Oru Naalil Valarnthene Malarnthene Devane

Oru Naalil Valarnthene Malarnthene Devane

64x64
Yezhu swarangalukkul ethanai paadal

Yezhu swarangalukkul ethanai paadal

64x64
Malaiyoram veesum kaathu

Malaiyoram veesum kaathu

64x64
Un Pakkathila Oru Poova Vacha Andha Poovum Mayangi Pogum

Un Pakkathila Oru Poova Vacha Andha Poovum Mayangi Pogum

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Gandhinagar
Gandhinagar

Gandhinagar Rendo Veedhi.

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 1
Engeyum Eppothum Raaja Episode 1

Engeyum Eppothum Raaja Episode 1

see more

Profiles

64x64

Keerthi Chawla

B'Day: 1981-12-09
Role: Actress

64x64

Gayathri Raghuram

B'Day: 1983-00-00
Role: Film actor, choreographer

64x64

Deepal Shaw

B'Day: 1986-02-21
Role: Actress, singer, model

64x64

Malaika Arora

B'Day: 1973-10-23
Role: Actress, Dancer, model, VJ, Television Presenter

more profiles