இன்றைய பிரபலம் - அனிருத்

Posted: 2013-10-31 11:22:13

இளம் இசையமைப்பாளர் ஒருவர், ஒரே பாடலின் மூலம் உலக அளவில் இசை ரசிகர்களை தன் பாடலை கேட்கவைதவர் என்ற பெருமைக்குரியவர் அனிருத் என்கிற அனிருத் ரவிச்சந்தர். அந்த பாடல் தான் 'ஒய் திஸ் கொலைவெறி'. இவரை பற்றி நாம் காண்போம். அனிருத் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகராக அறியப்படுகிறார். இவர் 2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன '3' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை போல் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு தான் அனிருத் திரையுலகிற்கு வந்தாராம்.

அனிருத் அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி, 1990-ஆம் வருடத்தில் பிறந்தவர். இவர் நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். இவர் அம்மா பெயர் லக்ஷ்மி. இவர் ஒரு நாட்டிய கலைஞர். அனிருத் முதலில் இசையில் ஆர்வம் கொண்டு, தனது பள்ளியில் உள்ள 'ஜின்க்ஸ்' என்ற இசைக்குழுவில் இணைந்தாராம். சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் அனிருத். பிறகு தனது பட்டப்படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தாராம். மேலும் லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ வாசிக்க பழகினாராம்.

சினிமா வாய்ப்பு: நடிகர் ரஜினிகாந்தின் மனைவியின் உறவினரும், தொலைக்காட்சி நடிகருமான ரவிச்சந்தரின் மகன் தான் அனிருத். இவரை சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் இயக்கிய, அவருடைய கணவர் நடிகர் தனுஷ் தயாரித்த '3' படம் மூலம் இசையமைப்பாளர் ஆக்கினர். மேலும் அந்தப் படத்தை பிரபலப்படுத்த ஒரு பாடல் வெளியிடப்பட்டது. அதுதான் 'வி திஸ் கொலவெறி' பாடல். இந்தப் பாடலை நடிகர் தனுஷ் எழுதிப் பாட, அனிருத் இசையமைத்தார். இந்தப் பாடலை யூடுபில் மட்டும் ஐம்பது லட்சம் தடவைக்கும் பார்த்து ரசித்துள்ளனர் ரசிகர்கள் உலகம் முழுவதும்.

குறிப்பிடத்தக்க படங்கள்: அனிருத் இசையமைப்பில் வெளிவந்த அந்த ஒரு பாடல் 'ஒய் திஸ் கொலைவெறி' இடம்பெற்ற '3' படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தற்போது தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பிஜோய் நம்பியாரின் 'டேவிட்' மற்றும் ''எதிர்நீச்சல்' படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இளம்வயதிலேயே சிறந்த இசைத் திறமையோடு இருக்கும் அனிருத், தனது இசை வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெற நாம் வாழ்த்துவோம்.

Movies:
Cast: Anirudh


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Thottavudan nenjam silirkkudhu

Thottavudan nenjam silirkkudhu

64x64
anupavam puthumai avanidam kaNdEn..

anupavam puthumai avanidam kaNdEn..

64x64
Ninaithen ennai

Ninaithen ennai

64x64
Ennathan sugamo

Ennathan sugamo

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

64x64

Old Tamil Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Punnagai Desam
Punnagai Desam

Punnagai Desam

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Sindhu Tulani

B'Day: 1983-07-19
Role: Actress, model

64x64

Pooja Kumar

B'Day: 1977-02-04
Role: actress, model, television presenter, producer

64x64

Natasha Model

B'Day: 1985-07-12
Role: Actress,model

64x64

Kovai Sarala

B'Day: 1962-04-07
Role: Actress

more profiles