தலைவா - தமிழ் திரைப்பட விமர்சனம்

Posted: 2013-11-08 16:13:04

நடிகர்கள்: விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம், அபிமன்யு சிங், நாசர் மற்றும் பலர்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு:  நிரவ் ஷா
இயக்குனர்: ஏ.எல்.விஜய்
தயாரிப்பு:  எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் புதிய படம் 'தலைவா'.  இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.  ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு திரில்லர் படமான 'தலைவா' படத்தில் நடிகர் சத்யராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம். மேலும் ராஜீவ் பிள்ளை மற்றும் அபிமன்யு சிங் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். நீரவ் ஷா ஒளிப்பதிவு. இப்போது படத்தின் கதையென்ன  பார்ப்போம்.

மும்பையில் உள்ள தாராவி பகுதியில் தமிழ் மக்களை காப்பாற்றிவரும் வேதா பாய் இறந்துவிடுகிறார். அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பு சத்யராஜ் வசம் வருகிறது.  இந்நிலையில், தன் அப்பாவைப் பற்றிய எந்த உண்மையும் தெரியாமல், ஆஸ்திரேலியாவில் பிசினஸ் செய்துகொண்டிருக்கிறார் விஜய். ஜாலியாக நடனம், நட்பு, காதல் என்று செல்லும் விஜய், ஒரு கட்டத்தில் மும்பை வருகிறார். அந்நிலையில், அவர் அப்பா சத்யராஜ் கொல்லப்படுகிறார்.  இப்போது மும்பை தமிழ் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு விஜய்யிடம் வருகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது 'தலைவா' படத்தின் க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதியில் விஜய் நடனம் மற்றும் காதல் என்று படத்தை கலகலப்பாக நகர்த்துவதில் உதவுகிறார். அவரைப் பார்க்க ஏதோ ஒரு இருபது வயது இளைஞர் போல் தோன்றுகிறார். வெல்டன் விஜய்..!! அவர் காதலிக்கும் பெண்ணாக வரும் அமலா பாலுக்கு படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தானம் வழக்கம் போல் கலக்கியுள்ளார். விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜ் மிகவும் அற்புதமாக தனது நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் அபிமன்யு சிங்கும் வித்தியாசமாக நடித்துள்ளார். படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை, இயக்குனர் சொன்னபடி சரியாக செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா அருமையாக படப்பதிவு செய்துள்ளார். ஹாலிவூட் தரத்தை ஒளிப்பதிவில் காணமுடிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் 'வாங்கண்ணா' மற்றும் 'சாலையோரம்' மற்றும் 'தமிழ் பசங்க' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் வகை. படத்தில் இடம்பெறும் நடனக்காட்சிகள் சிறப்பாக உள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இன்னும் படத்திற்கு வேகமான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு காட்சிகளில் ஒரு வித வேகமின்மை தெரிகிறது. அதேபோல், படத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை எளிதில் கணித்துவிடும் அளவுக்கு உள்ளதும் படத்தின் சிறு குறை என்று சொல்லலாம்.

மொத்தத்தில் 'தலைவா' வெற்றிவாகை சூடுவான்...!!!

Movies: Thalaivaa
Cast: Abbas, Abhinay, Vijay


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
kONaatha sengkarumpu koodaathu...

kONaatha sengkarumpu koodaathu...

64x64
Thoranam aadidum medaiyil

Thoranam aadidum medaiyil

64x64
Naane Naana Yaaro Thaana

Naane Naana Yaaro Thaana

64x64
manjsappodi thEykkaiyilE...

manjsappodi thEykkaiyilE...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Dharmam Thalai
Dharmam Thalai

Dharmam Thalai Kakkum

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 1
MSV is legend Music Director Interview Part 1

MSV is legend Music Director Interview Part 1

see more

Profiles

64x64

Iniya

B'Day: 1993-01-22
Role: Actress

64x64

Anjali Rao

B'Day: 0000-04-29
Role: Actress

64x64

Tanvi Vyas

B'Day: 1985-09-30
Role: Actress, model,designer

64x64

Akila

B'Day: 1989-06-12
Role: Actress

more profiles