ஆதலால் காதல் செய்வீர் - தமிழ் திரைப்பட விமர்சனம்

Posted: 2013-11-11 14:34:04

நடிகர்கள்:  சந்தோஷ் ரமேஷ், மனீஷா, ஜெயப்ரகாஷ், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர்
இசை:  யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு:  சூர்யா ஏ.ஆர்.
இயக்குனர்:  சுசீந்திரன்
தயாரிப்பு:  சரவணன்

'வெண்ணிலா கபடிக்குழு' இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படம் 'ஆதலால் காதல் செய்வீர்'. இந்தப் படம் ஒரு காதல் சார்ந்த கதையம்சம் உள்ள ஒரு டிராமா வகைப்படம் என்று சொல்லலாம். இந்த புதிய படத்தில் சந்தோஷ் ரமேஷ், மனீஷா, ஜெயப்ரகாஷ், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு சூர்யா ஏ.ஆர்.  இயக்குனர்  சுசீந்திரன்.  தயாரிப்பு  சரவணன்.  படத்தின் நாயகன் சந்தோஷ் ரமேஷ் தெலுங்கு தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷின் மகன் ஆவார். படத்தை பத்திரிக்கைகள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இப்போது படத்தின் கதையென்ன என்று பார்ப்போம்.

கார்த்தியும் (சந்தோஷ்) ஸ்வேதாவும் (மனீஷா) ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள்.  நட்பு பிறகு காதலாகிறது.  வீட்டிற்கு தெரியாமல் காதல் வளர்கிறது. இந்நிலையில் ஒருநாள், மாமல்லபுரத்திற்கு கார்த்தி மற்றும் ஸ்வேதா இருவரும் செல்கிறார்கள். அங்கே இருவருக்கும் இடையே உடலுறவு நடந்துவிடுகிறது. ஸ்வேதா கர்ப்பமாகிறாள். இந்த அதிர்ச்சிக்குப் பிறகு கார்த்தி-ஸ்வேதா காதல் என்ன ஆனது, அவள் குழந்தை பெற்றாளா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தின் கதை சினிமா போல் இல்லாமல் ஒரு உண்மைக் கதையை கண்முன்னே காட்டுவது போல் செல்கிறது என்பதால் படத்தின் கதையோடு இயல்பாக ஒன்ற முடிகிறது.

புதுமுகம் சந்தோஷ் பார்க்க சினிமா நாயகன் போல் இல்லை என்பதே அவருடைய கதாபாத்திரத்தின் பலம் என்று சொல்லலாம். இயல்பான ஒரு கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தை அப்படியே கொண்டுவருகிறார் சந்தோஷ். 'வழக்கு எண் 18/9' நாயகி மனீஷா படத்தின் நாயகியாக சிறப்பாக பொருந்துகிறார். நடுத்தர குடும்பப் பெண்ணாக வருகிறார். அவருடைய அம்மா மற்றும் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ் ஆகியோர் வெகு இயல்பாக நடித்துள்ளார்கள். நாயகனின் அம்மாவாக வெகு நாட்களுக்குப் பிறகு பூர்ணிமா ஜெயராம் நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் இயல்பாக நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் பலம். தொடக்கத்தில் வரும் 'ஆதலால் காதல் செய்வீர்' பாடல் ஹிட் வகை. மற்ற பாடல்களும் நன்றாக உள்ளது. இறுதியில் வரும் பாடல் காட்சி கண்ணில் நீர் வரவழைக்கும். ஒளிப்பதிவு சூர்யா ஆர். நன்றாக உள்ளது. இயக்குனர் சுசீந்திரன் காதல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை அருமையாக அதிர்ச்சியூட்டும் விதமாக படம் எடுத்துள்ளார். படத்தின் கடைசி அரைமணி நேரம் மிக ஜீவன் உள்ள பகுதி. இயல்பாக எதார்த்தமாக இளைய தலைமுறைக்கான ஒரு ஒரு பாடத்தை படமாக எடுத்துள்ள சுசீந்திரன் பாராட்டுக்குரியவர்.

மொத்தத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்' இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!!!

Movies: Aadhalal Kadhal Seiveer
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Maalai karukkalile

Maalai karukkalile

64x64
O maanE maanE unnaith thaanE..

O maanE maanE unnaith thaanE..

64x64
Andhi mazhai pozhigiradhu

Andhi mazhai pozhigiradhu

64x64
Mutrathu Maadapura Kaathalukku Thoothonnu Poi Varumaa

Mutrathu Maadapura Kaathalukku Thoothonnu Poi Varumaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kunguma Chimizh
Kunguma Chimizh

Kunguma Chimizh

see more

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Mia George

B'Day: 1992-01-28
Role: Actress, model, dancer

64x64

Raai Laxmi

B'Day: 1989-05-05
Role: Actress, model, stage performer

64x64

Mugda Gose

B'Day: 1986-07-26
Role: Model, Actress

64x64

Shruthi Sharma

B'Day: 1981-00-00
Role: Actor, Model

more profiles