இயக்குனர் தரணி

Posted: 2013-11-11 14:37:27

ஆக்சன் கலந்த மசாலா படங்களை எடுத்து ரசிகர்களை திருப்தி செய்யும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் தரணி.  அதிலும் நடிகர் விக்ரமுடன் இவர் இணைந்த படங்கள் பெரிய வெற்றிப்படங்கள். இயக்குனர் தரணியின் நிஜப்பெயர் வி.சி.ரமணி என்பதாகும். இவர் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் இயக்குனர் பட்டயப் படிப்பை முடித்து இயக்குனர் ஆனவர். இயக்குனராக தரணி இயக்கிய முதல் படம் எதுவென்றால், அது 'எதிரும் புதிரும்' திரைப்படம் தான். இந்தப் படத்தின் கதையானது சந்தனக் கடத்தில் வீரப்பம் தம்பி அர்ஜுனனின் கதையாகும். நடிகர் நெப்போலியன் அர்ஜூனன் கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் மம்மூட்டி கலெக்டராக இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றிபெற்ற படம் என்று சொல்லலாம்.

'எதிரும் புதிரும்' படம் 1999-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின், நடிகர் விக்ரமை வைத்து தரணி இயக்கிய படம் 'தில்' ஆகும். இந்தப் படம் பெரிய வெற்றியடைய, பிறகு மீண்டும் இரண்டு வருட இடைவெளியில் 2003-ஆம் ஆண்டு தரணி இயக்கிய படம் 'தூள்'. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படம் தான். 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தரணி இயக்கிய 'கில்லி' படமும் மகத்தான வெற்றிபெற்றது. பிறகு தெலுங்கில் பவன் கல்யானை வைத்து 'பங்காரம்', தமிழில் 'குருவி', மற்றும் சிம்புவை வைத்து 'ஒஸ்தி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் தரணி.

'தில்' மற்றும் 'தூள்' வெற்றிப்பட கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் தரணி மீண்டும் இணைகிறார்கள் என்று செய்திகள் கசிகிறது. இவர்கள் கூட்டணி மேல் சினிமா ரசிகர்களுக்கு என்றுமே எதிர்பார்ப்பு தான், ஏனென்றால் இவர்கள் சேர்ந்தால் படம் நிச்சயம் வெற்றியடையும் என்பதுதான் காரணம். தற்போது விக்ரம் இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், விக்ரம் நடிக்க உள்ள கதையை தரணி வேகமாக உருவாக்கிவருகிறார் என்று சொல்கிறார்கள். இந்த புதிய படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ஐங்கரன் நிறுவனம் சமீப காலமாக படங்கள் எதுவும் தயாரிக்கவில்லை. அவர்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து எடுத்த 'ஏகன்'மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த 'வில்லு' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியதால் படங்கள் எடுப்பதை ஐங்கரன் நிறுத்தியிருந்தது. இந்நிலையில் தான் மீண்டும் விக்ரம் மற்றும் தரணி கூட்டணியில் ஒரு படம் எடுக்க இருக்கிறார்களாம். இந்தப் படம் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவை வைத்து தரணி கடைசியாக இயக்கிய படம் 'ஒஸ்தி'. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்க உள்ள படம் இதுவாக இருக்கும். விரைவில் இந்தப் படம் குறித்து தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Movies:
Cast: Dharani


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Sathiyathin sodhanaikku

Sathiyathin sodhanaikku

64x64
Oru naal pazhagiya pazhakkamalla

Oru naal pazhagiya pazhakkamalla

64x64
pooppOlE un punnakaiyil...

pooppOlE un punnakaiyil...

64x64
Manamagale marumagale vaa

Manamagale marumagale vaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Ayutha Poojai
Ayutha Poojai

Ayutha Poojai

see more

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Kiran Dembla

B'Day: 1974-11-10
Role: Actress,model

64x64

Sri Devi

B'Day: 1986-10-29
Role: Actress

64x64

Ashrita Shetty

B'Day: 1993-07-16
Role: Actor Model

64x64

Bhavana

B'Day: 1986-06-06
Role: Actress

more profiles