நடிகை மனீஷா யாதவ்

Posted: 2013-11-11 14:39:59

மனீஷா யாதவ் தமிழில் தற்போது அறிமுகம் ஆகி நடித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம் நடிகை. இவர் நடிகை மட்டுமல்ல ஒரு மாடலும் கூட. இவர் அறிமுகம் ஆன தமிழ் படமான 'வழக்கு எண் 18/9' படத்தில் ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் இவர். இந்தப் படம் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டதால், மனீஷா யாதவ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் அறிமுகம் ஆனார். மனீஷா யாதவின் சொந்த ஊர் எதுவென்று பார்த்தால் அது பெங்களூர் தான். இவர் நடித்த முதல் தெலுங்கு படம் 'டுநிகா டூநிகா' என்பதாகும்.

மனீஷா நடிப்பில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் மொத்தம் ஐந்து தான். அவைகள் 'வழக்கு எண் 18/9',   'டுநிகா டுநிகா', 'ஆதலால் காதல் செய்வீர்' மேலும் தற்போது படமாகி வரும் 'ஜன்னல் ஓரம்' மற்றும் 'பட்டய கிளப்புற பாண்டியா' ஆகிய படங்கள்.  'டுநிகா டுநிகா' படத்தில் மனீஷா ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகர் பெயர் சுமந்த் அஷ்வின். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் எம்.எஸ்.ராஜூவின் மகன் ஆவார். மனீஷா சிறப்பாக நடித்த முதல் படமான 'வழக்கு எண் 18/9'  படத்துக்காக இவர் பெயர் சிறந்த புது நடிகருக்கான விஜய் விருதுக்காக இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'வழக்கு எண் 18/9' படம் மூலம் நடிகையானவர் மனீஷா. இந்தப் படம் பெரிய வெற்றிபெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்நிலையில், இந்தப் பட நாயகிக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் இவர் நாயகியாக நடித்த 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் இவர் நடிப்பு சிறப்பாக இருந்தது.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் படமும் வெற்றிபெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டு புதிய படங்களில் நடித்துவருகிறார் மனீஷா.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள 'வேங்கைசாமி' படத்திலும் மனீஷா தான் நாயகி என்கிறார்கள். இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக மனீஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். மனீஷா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மற்ற படங்கள் இயக்குனர் கரு.பழனியப்பனின் 'ஜன்னல் ஓரம்' மற்றும் விதார்த் நாயகனாக நடிக்கும் 'பட்டய கிளப்பு பாண்டியா' ஆகிய படங்கள். மொத்தத்தில் மனீஷா ஒரு முன்னணி நடிகையாக ஆவதற்கான அறிகுறிகள் மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளன. வாழ்த்துக்கள் மனீஷா...!!

Movies:
Cast: Manisha Yadav


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Poo vannam pola nenjam

Poo vannam pola nenjam

64x64
Andhi mazhai pozhigiradhu

Andhi mazhai pozhigiradhu

64x64
Vilakku Vaippom Vilakku Vaippom Kulam Vilanga Vilakku Vaippom

Vilakku Vaippom Vilakku Vaippom Kulam Vilanga Vilakku Vaippom

64x64
Thanneerile Mugam Paarkkum Aagaayame

Thanneerile Mugam Paarkkum Aagaayame

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Ashrita Shetty

B'Day: 1993-07-16
Role: Actor Model

64x64

Angela Johnson

B'Day: 1982-05-14
Role: Actress, model

64x64

Kalyani(Telugu)

B'Day: 1990-11-23
Role: Actress & TV Anchor

64x64

Anu Smruthi

B'Day: 1986-03-20
Role: Actress

more profiles