பேயைக் காதலிக்கும் நாயகன்

Posted: 2015-01-04 23:20:07

தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது மெல்ல முழுநேர நடிகராக மாறிவருகிறார். ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்தப்படங்கள் 'டார்லிங்',  'பென்சில்', மற்றும் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா'. இந்த மூன்று படங்களுக்கும் அவரே இசையமைத்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் ஒரு நடிகராக அறிமுகமான திரைப்படம் 'பென்சில்'. இதில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் மணி நாகராஜ் எழுதி இயக்கியுள்ள 'பென்சில்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே முடிவடைந்து தற்போது போஸ்ட்-புரொடக்சன் பணிகள் நடந்துவருகிறது. இது ஒரு இளமையான காதல் கதைகொண்ட படமாக உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஊர்வசி, விடிவி கணேஷ், டி.பி.கஜேந்திரன், பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வளரும் இன்னொரு திரைப்படமான திரிஷா இல்லன்னா நயன்தாரா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இது ஒரு முழுநீளக் காமெடி திரைப்படம் என்று சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏற்கெனவே உருவாகி, தற்போது ரிலீஸ் செய்ய தயாராக உள்ள திரைப்படம் 'டார்லிங்'.  தெலுங்கில் ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் ரீமேக் தான் இந்தப்படம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பேயாக இருக்கும் நாயகியை அறியாமல் காதலிக்கும் நாயகனின் கதையாக 'டார்லிங்' படத்தின் கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது பேய்ப்பட சீசன் என்பதால் 'டார்லிங்' படம் நல்ல வரவேற்பு பெரும் என்று நம்பப்படுகிறது.

Movies: Darling
Cast: G. V. Prakash Kumar


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Endru Thaniyum Intha Suthanthira Thaagam

Endru Thaniyum Intha Suthanthira Thaagam

64x64
Ninaikkindra Paathaiyil Nadakkindra Thendrale

Ninaikkindra Paathaiyil Nadakkindra Thendrale

64x64
Raathaiyin nenjame

Raathaiyin nenjame

64x64
kampan Emaanhthaan...

kampan Emaanhthaan...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Inaindha Kaigal
Inaindha Kaigal

Inaindha Kaigal

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Ragini Nandwnai

B'Day: 1989-09-04
Role: Actress, model

64x64

Gayathiri Iyer

B'Day: 1990-06-16
Role: Actress, model

64x64

Adha Sharma

B'Day: 1989-05-11
Role: Actress, model

64x64

Sandhya Shetty

B'Day: 0000-05-29
Role: Actress, model

more profiles