வசூல் சாதனை புரிந்த 'பிகே'

Posted: 2015-01-04 23:21:43

தற்போது அமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்பிவரும் புதிய இந்தி திரைப்படம் 'பிகே'. இந்தப்படத்தில் அமீர் கான் ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார். மற்ற முக்கிய வேடங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத், போமன் இராணி, சௌரவ் சுக்லா, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'பி.கே'  திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மேலும், உலகம் முழுக்க முதல்நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட 27 கோடி என்றும் சொல்லப்பட்டது. வசூல் மெல்ல நாளுக்குநாள் அதிகரித்தது.

மேலும், படம் வெளியாகி ஒரே வாரத்தில் மட்டுமே 150 கோடி வரை வசூல் செய்துள்ளது 'பி.கே.'. இந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக சிலர் படத்தை எதிர்த்துக் கருத்துகள் வெளியிட படத்தை பார்க்காமல் விட்ட ஏனைய ரசிகர்களும் படம் பார்க்க செல்ல படத்தின் வசூல் மேலும் அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் மொத்தமாக இதுவரை 280 கோடி வரை 'பிகே' வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், இதுவரை அதிகம் வசூலித்த இந்திப்படம் என்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளது 'பிகே'. இந்தப் படம் ஒரு காமெடிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் வெளியாகி வெற்றிபெற்றது.

Movies:
Cast: Aamir Khan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Anbulla mannavane

Anbulla mannavane

64x64
Kuyile Kuyile Poonguyile

Kuyile Kuyile Poonguyile

64x64
Kaettavarellam paadalam

Kaettavarellam paadalam

64x64
Aalolam Paadi

Aalolam Paadi

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Collection of Thathuva padalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Hera Pheri
Hera Pheri

Hera Pheri

see more

Music Concert

Endrendrum Raja - Ilayaraja Introduction
Endrendrum Raja - Ilayaraja Introduction

Endrendrum Raja - Ilayaraja Introduction

see more

Profiles

64x64

Minissha Lamba

B'Day: 1985-01-18
Role: Actress, model

64x64

K.R. Vijaya

B'Day: 1938-11-30
Role: Actress

64x64

Abhinaya

B'Day: 1991-09-13
Role: Actress

64x64

Soundarya

B'Day: 1972-07-18
Role: Actress,film producer

more profiles