Posted: 2015-01-05 22:38:25
'வம்சம்' என்ற பாண்டிராஜ் இயக்கிய திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அருள்நிதி நடிப்பில் இதுவரை ஐந்து படங்கள் வெளிவந்துள்ளது. அந்தப் படங்கள் 'வம்சம்', 'உதயன்', 'மௌனகுரு', 'தகராறு', 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'. இதில் 2011-ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் சாந்தகுமார் இயக்கிய 'மௌனகுரு' படத்தை யாரும் மறக்கமுடியாது.
தற்போது அருள்நிதி நடிப்பில் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' மற்றும் 'டி மோன்டி காலனி' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா என்ற புதிய இயக்குனர் எழுதி இயக்கியுள்ள முழுநீளக் காமெடிப் படமான 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'. திரைப்படத்தை வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் பி.ஆறுமுககுமார் ஆகியோர் இணைந்து லியோ விஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்கள்.
பி.ஆர்.ரெசின் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் மகேஷ் முத்துசாமி. 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, பகவதி பெருமாள், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மற்ற முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வரும் பொங்கலுக்கு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படமும் வெளிவருமா என்று தெரியவில்லை. விக்ரம் நடிக்கும் 'ஐ' மற்றும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் பொங்கல் முடிந்துதான் ரிலீஸ் ஆகலாம் என்றும் சொல்லப்படும் நிலையில் இந்தப்படம் திரைக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.