கொம்பன் - பொங்கல் ரிலீஸ்?

Posted: 2015-01-05 22:41:09

'பருத்திவீரன்' படத்துக்குப் பிறகு கார்த்தி இதுவரை ஒன்பது படங்களில் நடித்துள்ளார், அதில் கிராமத்துக் கதையம்சம் கொண்ட படம் ஒன்று கூட இல்லை. இந்த நிலையில், தற்போது கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் புதிய படம் 'கொம்பன்'. இந்தப்படம் கிராமத்தில் நிகழ்வதுபோல அமைந்த கதைகொண்ட திரைப்படம் என்கிறார்கள்.

சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையா 'கொம்பன்' மூலம் தனது இரண்டாவது திரைப்படத்தை எடுத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா,பிரகாஷ்பாபு, மற்றும் பிரபு ஆகியோர் இணைந்து 'கொம்பன்' திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள். லக்ஷ்மி மேனன் ஹீரோயினாக  கார்த்தியுடன் முதன்முறையாக இதில் நடிக்கிறார்.

ராஜ்கிரண் 'கொம்பன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாயகியின் அப்பாவாக கார்த்தியின் மாமனாராக நடித்துள்ளார். மேலும், மாமனார் மற்றும் மருமகன் இடையே உள்ள மென்மையான உறவை மையப்படுத்தி 'கொம்பன்' படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, கருணாஸ் மற்றும் தம்பி ராமையா படத்தில் வரும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

'கொம்பன்' படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ்குமார் அமைத்துள்ளார்.  படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட்-புரொடக்சன் பணிகள் நடந்துவருகிறது.  வேல்ராஜ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். வருகிற பொங்கல் பண்டிகைக்கு 'கொம்பன்' ரசிகர்கள் பார்வைக்கு வர உள்ளான் என்று முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Movies: Komban
Cast: Karthik Sivakumar, Lakshmi Menon


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
maanE maangkuyilE maadakkuLam...

maanE maangkuyilE maadakkuLam...

64x64
Kuyile Kuyile Undhan Geethangal Ketkatho

Kuyile Kuyile Undhan Geethangal Ketkatho

64x64
Kannile iruppathenna

Kannile iruppathenna

64x64
Amma Adi Amma Sugam Summa Varumaa

Amma Adi Amma Sugam Summa Varumaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Shamitabh
Shamitabh

Shamitabh

see more

Music Concert

Yuvan Shankar Raja Malaysia Concert 2012
Yuvan Shankar Raja Malaysia Concert 2012

Yuvan Shankar Raja Malaysia Concert 2012

see more

Profiles

64x64

Delnaz Irani

B'Day: 1972-09-04
Role: Actress

64x64

Samiksha

B'Day: 1985-02-14
Role: Model, Actress

64x64

Tamannaah

B'Day: 1989-12-21
Role: Actress

64x64

Natalie Portman

B'Day: 1981-06-09
Role: Actress

more profiles